உள்ளூர் செய்திகள்

ஆரல்வாய்மொழி ரவுடி கொலையில் மேலும் 4 பேருக்கு தொடர்பு - கார்-மோட்டார் சைக்கிள் பறிமுதல்

Published On 2023-02-23 07:07 GMT   |   Update On 2023-02-23 07:07 GMT
  • தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் சூப் கடையில் ஏற்பட்ட விவகாரத்தில் ராஜ்குமார் கொலை
  • பன்றி பண்ணையில் வேலை பார்க்கும் பிரவீன் என்ப வரை சூப் கடையில் வைத்து ராஜ்குமார் மிரட்டியுள்ளார்.

நாகர்கோவில் :

ஆரல்வாய்மொழி அருகே அனந்த பத்மநாபபுரத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 36), பிரபல ரவுடி.

இவர் கடந்த 16-ந்தேதி சந்தவிளை பகுதியில் சென்ற போது ஒரு கும்பல் அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்தது. இது குறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற் கொண்டனர். கொலையாளிகளை பிடிக்க மூன்று தனிப்படை அமைக்கப் பட்டது. தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் சூப் கடையில் ஏற்பட்ட விவகாரத்தில் ராஜ்குமார் கொலை செய் யப்பட்டது தெரிய வந்தது.

இது தொடர்பாக புது குடியிருப்பைச் சேர்ந்த பிரவீன் (23), நாகர்கோ விலைச் சேர்ந்த ராம சித்தர் (26), ராமன்புதூரைச் சேர்ந்த ஜெபின் (26) ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் நாகர்கோவில் ராமன்புதூரை சேர்ந்த ஜோன்ஸ் (34), பூதப்பாண்டி கேசவன்புதூரைச் சேர்ந்த ஈசாக் (37), சீதப்பால் மேல தெருவைச் சேர்ந்த அரவிந்த் (30) ஆகிய மூன்று பேரும் பத்மநாபபுரம் கோர்ட்டில் சரணடைந்தனர். மூன்று பேரையும் போலீஸ் காவ லில் எடுத்து விசாரிக்க போலீசார் மனுத்தாக்கல் செய்தனர்.

இதையடுத்து 3 பேருக்கும் ஒருநாள் காவல் வழங்கப்பட்டது. போலீசார் ஜோன்ஸ், ஈசாக், அரவிந்த் மூன்று பேரையும் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டனர். விசார ணையில் கொலை செய் யப்பட்ட ராஜ்குமா ருக்கும் ஈசாக்கும் இடையே ஏற்க னவே முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் ஈசாக்கின் பன்றி பண்ணையில் வேலை பார்க்கும் பிரவீன் என்ப வரை சூப் கடையில் வைத்து ராஜ்குமார் மிரட்டி யுள்ளார்.

இதை பிரவீன், ஈசாக்கி டம் கூறினார்.ஏற்கனவே ஈசாக்குடன் ராஜ்குமாருக்கு பிரச்சனை இருந்து வந்த தையடுத்து அவரை தீர்த்து கட்ட முடிவு செய்த னர். சம்பவத்தன்று ராஜ் குமார் குடிபோதையில் வந்துள்ளார். அவரை தடுத்து நிறுத்தி தீர்த்து கட்டியது விசாரணையில் தெரியவந்துள்ளது. கொலைக்கு பயன்படுத்திய 4 மோட்டார் சைக்கிள் 3 கத்திகள் மற்றும் கார் ஒன்றையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

போலீஸ் விசாரணைக்கு பிறகு மூன்று பேரும் மீண்டும் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டனர். இந்த வழக்கில் மேலும் 4 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. 4 பேரை பிடிக்க தனிப்படை போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Tags:    

Similar News