உள்ளூர் செய்திகள்

கவிமணி பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட 25 பேர் மயக்கம் - சிகிச்சையில் இருந்த மேலும் 4 மாணவிகள் டிஸ்சார்ஜ்

Published On 2022-07-23 07:19 GMT   |   Update On 2022-07-23 07:19 GMT
  • மதிய உணவு சாப்பிட்ட 25 மாணவ-மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது.
  • பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட உணவின் தன்மை குறித்த முடிவுகள் நாளைக்குள் தெரிய வரும்

நாகர்கோவில் :

நாகர்கோவில் கோட்டார் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நேற்று முன்தினம் மதிய உணவு சாப்பிட்ட 25 மாணவ-மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது.

இதையடுத்து அவர் கள் சிகிச்சைக்காக ஆசாரிப் பள்ளம் அரசு ஆஸ்பத்திரி யில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இது பற்றி தகவல் அறிந்ததும் கலெக்டர் அரவிந்த் மற்றும் அதிகா ரிகள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற் கொண்டனர்.

மாநகராட்சி அதிகாரிகளும் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டனர். உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளும், மாணவிகள் சாப்பிட்ட உணவை ஆய்வு செய்தனர். பின்னர் அந்த உணவை பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த நிலையில் ஆஸ்பத்தி ரியில் சிகிச்சை பெற்று வந்த 25 மாணவிகளில் 21 பேர் நேற்று முன்தினம் டிஸ்சார்ஜ் ஆனார்கள். 4 மாணவிகளுக்கு மட்டும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

டாக்டர்கள் மாணவிகளை கண்காணித்து வந்த நிலையில் நேற்று மாலை மேலும் 4 மாணவிகளும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட மாணவிகள் தங்களது வீடுகளுக்கு சென்றனர்.

இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதிகாரிகள் குழுவினர் பள்ளிகளில் தொடர்ந்து ஆய்வு பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.

மாணவிகள் சாப்பிட்ட உணவில் ஏதாவது பிரச்சனை உள்ளதா என்பது பரிசோதனை அறிக்கை முடிவு கிடைத்த பிறகு தெரியவரும். பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட உணவின் தன்மை குறித்த முடிவுகள் நாளைக்குள் தெரிய வரும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உணவு தயார் செய்ததில் குறைபாடுகள் ஏதும் தெரிய வந்தால் சம்பந்தப்பட்ட சத்துணவு ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் அரவிந்த் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News