உள்ளூர் செய்திகள்

ஆரல்வாய்மொழியில் இன்று 10-ம் வகுப்பு மாணவி தூக்குபோட்டு தற்கொலை

Published On 2022-10-10 10:00 GMT   |   Update On 2022-10-10 10:00 GMT
  • உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை
  • அவர் அடிக்கடி செல்போனில் விளையாடி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது

கன்னியாகுமரி:

ஆரல்வாய்மொழி வடக்கூர் கல்பாளைய தெருவை சேர்ந்தவர் தங்கம். இவரது கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களின் மகள் ரம்யா (வயது 15).ரம்யா அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். கணவர் இறந்த பின்பு தங்கம் அந்த பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார்.

ரம்யா பள்ளிக்கு சென்று வந்த பின்னர் தாயாருக்கு உதவி செய்து விட்டு வீட்டுக்கு சென்று விடுவார். படித்து விட்டு அவரது அறையில் தூங்க செல்வார். இன்று காலை ரம்யா நீண்ட நேரமாகியும் அறையை விட்டு வெளியே வரவில்லை. இதனால் அவரது தாயார் தங்கம், அறைக்கு சென்று கதவை தட்டினார்.

அறைக்கதவு திறக்காததால், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து திறந்தார்.

அங்கு ரம்யா, மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த தங்கம் அலறினார்.

இது பற்றி ஆரல்வாய்மொழி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து ரம்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் ரம்யா அடிக்கடி செல்போ னில் விளையாடி கொண்டிரு ந்ததாகவும், அதனை தாயார் கண்டித்ததால் மனம் உடைந்து தற்கொலை செய்தி ருப்பதாகவும் தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News