உள்ளூர் செய்திகள்

3 அணைகளில் இருந்து பாசனத்திற்காக 1014 கனஅடி தண்ணீர் வெளியேற்றம்

Published On 2022-09-20 07:02 GMT   |   Update On 2022-09-20 07:02 GMT
  • அணையின் நீர்மட்டத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள்.
  • மாவட்டம் முழுவதும் உள்ள பாசன குளங்களிலும் போதுமான அளவு தண்ணீர் இருப்பு உள்ளது.

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு பெய்து வந்த சாரல் மழையின் காரணமாக பேச்சிபாறை, பெருஞ்சாணி அணைகளின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகிறது.

அணையின் நீர்மட்டத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள். பேச்சிபாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளில் இருந்து 1014 கன அடி தண்ணீர் பாசனத்திற்காக திறந்து விடப்பட்டு உள்ளது. இந்த தண்ணீர் தோவாளை சானல், அனந்த னார் சானல் உள்பட அனைத்து சானல்களிலும் ஷிப்டு முறையில் வெளி யேற்றப் பட்டு வருகிறது.

48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிபாறை அணை நீர்மட்டம் இன்று காலை 43.95 அடியாக உள்ளது. அணைக்கு 632 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 439 கனஅடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது.

77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 72.11 அடியாக உள்ளது. அணைக்கு 304 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை யில் இருந்து 425 கன அடி தண்ணீர் வெளியேற்றப் படுகிறது.

சிற்றாறு-1 அணை நீர்மட்டம் 11.02 அடியாக உள்ளது. அணைக்கு 80 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை யில் இருந்து 150 கனஅடி தண்ணீர் வெளியேற்றப் படுகிறது.

சிற்றார்-2 அணை நீர்மட்டம் 11.12 அடியாகவும், பொய்கை அணை நீர்மட்டம் 16.70 அடியாகவும், மாம்ப ழத்துறையாறு அணை நீர்மட்டம் 38.55 அடியாகவும் உள்ளது.

நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணையின் நீர்மட்டம் 13.70 அடியாக உள்ளது. அணையில் இருந்து பொதுமக்களுக்கு தங்குதடை இன்றி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மாவட்டம் முழுவதும் உள்ள பாசன குளங்களிலும் போதுமான அளவு தண்ணீர் இருப்பு உள்ளது.

Tags:    

Similar News