உள்ளூர் செய்திகள்

தக்கலை பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க கூடுதலாக 10 கண்காணிப்பு காமிராக்கள் - 2 ஆடுகளை கடித்துக் கொன்றதால் மக்கள் அச்சம்

Published On 2023-02-18 14:19 IST   |   Update On 2023-02-18 14:19:00 IST
  • சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க 2 காமிரா க்களை அமைத்தனர்.
  • பகல் நேரத்தில் 15 ஊழியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள நிலையில் தற்போது இரவி லும் கண்காணிப்பு

கன்னியாகுமரி :

குமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள சரல் விளை, நரிச்சிக்கல், குழிவிளை, கொரங்கேற்றி பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக, ரப்பர் பால் வெட்டச் சென்ற தொழி லாளர்கள் தெரிவித்தனர்.

இதனால் அந்தப் பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள், சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க 2 காமிரா க்களை அமைத்தனர்.

இந்த நிலையில் நேற்று கல்லாம்பொற்றை கிராமத்தில் ஜோசப் சிங் என்ற விவசாயி வீட்டின் பின்புறம் கட்டப்பட்டு இருந்த 2 ஆடுகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தது. அந்த ஆடுகளை மர்ம விலங்கு கடித்துக் கொன்றது தெரிய வந்தது.

எனவே ஆடுகளை கடித்துக் கொன்றது, சிறுத்தையாக இருக்கலாம் என்ற அச்சம் மக்களிடையே மீண்டும் பரவியது.

இது குறித்த தகவல் கிடைத்ததும் மாவட்ட வன அலுவலர் இளையராஜா தலைமையில் வன ஊழி யர்கள் சம்பவ இடம் விரைந்து வந்து பார்வை யிட்டனர். அந்தப் பகுதியை ஆய்வு செய்த போது, விலங்குகளின் கால் தடம் உள்ளிட்ட எந்த தடயங்களும் கிடைக்கவில்லை.

இதனால் ஆடுகளை கடித்துக் கொன்ற மர்ம விலங்கு பற்றிய அச்சம் நீடித்தே வரு கிறது. இதற்கிடையில் சிறுத்ைத நடமாட்டத்தை கண்காணிக்க கூடுதல் காமிராக்கள் பொருத்த வனத்துறை முடிவு செய்தது. அதன்படி 10 இடங்களில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

மேலும் கல்லாம் பொற்றை கிராமத்தில் கூண்டும் வைக்கப்பட்டு உள்ளது. பகல் நேரத்தில் 15 ஊழியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள நிலையில் தற்போது இரவி லும் கண்காணிப்பு பணிக்கு ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக வன அலுவலர் இளையராஜா தெரிவித்தார்.

Tags:    

Similar News