உள்ளூர் செய்திகள்

புதிய சந்தை கட்டிடம் திறப்பு விழாவில் அமைச்சர் மனோ தங்கராஜ் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று ரிப்பன் வெட்டி காய்கனி சந்தையை திறந்து வைத்தார்.

தக்கலையில் புதிய கட்டிடத்தில் காய்கனி சந்தை

Published On 2022-12-31 12:34 IST   |   Update On 2022-12-31 12:34:00 IST
  • அமைச்சர் மனோ தங்கராஜ் திறந்து வைத்தார்
  • மீன்சந்தை அருகே காலியிடத்தில் ரூ. 1.5 கோடியில் காய்கனி சந்தைக்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டது.

கன்னியாகுமரி:

வாகனங்களின் அதிக ரிப்பு மற்றும் போக்குவரத்து நெருக்கடி காரணமாக களியக்காவிளை பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்ய முந்தைய அ.தி.மு.க. அரசு சில ஆண்டுகளுக்கு முன்பு நடவடிக்கை எடுத்தது.

இதற்காக பஸ் நிலை யத்தின் அருகில் உள்ள காய்கனி சந்தையையும் இணைத்து விரிவாக்கப் பணி மேற்கொள்ள நடவ டிக்கை எடுக்கப்பட்டது. இதற்கு காய்கனி சந்தை வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து மீன்சந்தை அருகே காலியிடத்தில் ரூ. 1.5 கோடியில் காய்கனி சந்தைக்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டது. பணிகள் முடிவடைந்ததையடுத்து காய்கனி சந்தை புதிய கட்டிடத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து புதிய சந்தை கட்டிடம் திறப்பு விழா களியக்கா விளை பேரூராட்சி தலைவர் சுரேஷ் தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் ரமாதேவி, விஜயதரணி எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் அமைச்சர் மனோ தங்கராஜ் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று ரிப்பன் வெட்டி காய்கனி சந்தையை திறந்து வைத்தார்.நிகழ்ச்சியில் குமரி மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் விஜயலட்சுமி, உதவி செயற்பொறியாளர் புஷ்பலதா, களியக்காவிளை பேரூராட்சி இளநிலை பொறியாளர் பத்மதேவன், பேரூராட்சி துணைத் தலைவர் பென்னட்ராஜ், வார்டு உறுப்பினர்கள் ரிபாய், வின்சென்ட், உமா மகேஸ்வரி, சுனிதா, விஜய குமாரி, தாஸ், விஜயா, நிஷா, டெல்பின் ஜலீலா, வர்த்தகர் சங்க மாநில துணைத் தலைவர் கருங்கல் ஜார்ஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News