உள்ளூர் செய்திகள்

கோப்பு படம் 

பூதப்பாண்டிஅருகே குளத்தில் மர்மமாக இறந்த சிறுவன் வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம்

Published On 2022-12-14 07:17 GMT   |   Update On 2022-12-14 07:17 GMT
  • விளையாடச் சென்ற 7-ம் வகுப்பு மாணவன் வீடு திரும்பவில்லை.
  • 2 நாட்களுக்கு பிறகு ஓரு குளத்தில் பிணமாக மிதந்தான்.

நாகர்கோவில்:

கேரள மாநிலம் விழிஞ்சம் பகுதியைச் சேர்ந்தவர் நிஜிபு. இவரது மகன் ஆதில் (வயது 12).

7-ம் வகுப்பு மாணவனான இவன், கடந்த மே மாதம் குமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே திட்டுவிளையில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு வந்திருந்தான். மே 6-ந் தேதி வீட்டில் இருந்து விளையாடச் சென்ற அவன், அதன்பிறகு வீடு திரும்பவில்லை.

இந்த நிலையில் 2 நாட்களுக்கு பிறகு மணத்திட்டை பகுதியில் உள்ள ஓரு குளத்தில் முகம து ஆதில் பிணமாக மிதந்தான். அவன் எப்படி இறந்தான்? என்பது தொடர்பாக பூதப்பாண்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த வழக்கு தாமதமானதை தொடர்ந்து உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்துமாறு கேரள முதல்-மந்திரி பிணராய் விஜயனுக்கு, மாணவனி ன் தந்தை நிஜிபு வேண்டுகோள் விடுத்தார். இதனையடுத்து, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, பிணராயி விஜயன் கடிதம் எழுதினார். ஆதில் முகமது மரணம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி குற்றவாளியை விரைந்து கைது செய்யவேண்டும் என அதில் குறிப்பிட்டு இருந்தார்.

இந்த நிலையில் முகமது ஆதில் மரணம் வழக்கு விசாரணை தற்போது சி.பி.சிஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டுள்ளது.

Tags:    

Similar News