உள்ளூர் செய்திகள்
புதிய ஆலயத்தை பிஷப் செல்லையா திறந்து வைத்தார். அருகில் கேட்சன் உள்ளார்.
எட்டாமடையில் இன்று சி.எஸ்.ஐ.ஆலயம் திறப்பு
- புதிய ஆலயத்தை சி.எஸ்.ஐ. பேராயர் செல்லையா திறந்து வைத்தார்.
- விழாவிற்கு திட்டுவிளை சேகரத்து போதகர் ராஜ்குமார் தலைமை தாங்கினார்.
நாகர்கோவில்:
தென்னிந்திய திருச்சபை கன்னியாகுமரி பேராயம் திட்டுவிளை சேகரத்துக்கு உட்பட்ட எட்டா மடையில் புதிதாக சி.எஸ்.ஐ. ஆலயம் கட்டப்பட்டது.
புதிய ஆலய அர்ப்பணம் விழா இன்று நடந்தது. விழாவிற்கு திட்டுவிளை சேகரத்து போதகர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். சபை போதகர் பிரைட் ஜெப நேசஸ் முன்னிலை வகித்தார். புதிய ஆலயத்தை சி.எஸ்.ஐ. பேராயர் செல்லையா திறந்து வைத்தார்.
விழாவில் பேராய மாமன்ற உறுப்பினரும் தி.மு.க. மாவட்ட பொருளா ளருமான கேட்சன், சபைச் செயலாளரும் நாகர்கோ வில் டதி பெண்கள் மேல்நிலைப் பள்ளி தாளாளருமான ஜெயஷீலா கேட்சன், சபை பொருளாளர் சாம் செல்வராஜ், சபை கணக்கர் ஐசக், உறுப்பினர் ஜெகன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து விருந்து நிகழ்ச்சியும் நடந்தது.