இரணியல் அருகே வாகன சோதனையில் பிடிபட்ட 69 மது பாட்டில்கள் மற்றும் இருசக்கர வாகனத்தை படத்தில் காணலாம்.
இரணியல் அருகே இருசக்கர வாகனத்தில் கடத்திய மது பாட்டில்கள் பறிமுதல்
- மாவட்டம் முழு வதும் போலீசார் தீவிர கண்காணிப்பு
- தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
கன்னியாகுமரி:
குமரி மாவட்டத்தில் போதை பொருள் நட மாட்டத்தை கட்டுப்படுத்த போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு உள்ளார். அவரது உத்தரவின் பேரில் மாவட்டம் முழு வதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். வாகன சோதனையும் நடத்தி வரு கின்றனர்.
இதையொட்டி இரணியல் சப்- இன்ஸ் பெக்டர் ஜோதி தனிஸ்லாஸ் மற்றும் போலீசார் காரங்காடு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியே வந்த மோட்டார் சைக்கிளில் வந்த நபரை நிறுத்த கூறிய போது நிற்காமல் சென்றார்.
அதனால் போலீசார் மோட்டார் சைக்கிளில் சென்றவரை விரட்டி சென்ற போது வாகனத்தை நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார். போலீசார் மோட்டார் சைக்கிளை சோதனை செய்த போது அனுமதி இன்றி 69 மது பாட்டில்கள் இருந்தது தெரிய வந்தது
அதனை பறிமுதல் செய்து மோட்டார் சைக்கிளை ஓட்டிவந்த நபரை தேடி வருகின்றனர்.