உள்ளூர் செய்திகள்

டிரைவருக்கு பரிசு வழங்கி பாராட்டிய போலீசார்.

நாகர்கோவிலில் ஆட்டோவில் பயணி தவறவிட்ட நகையை போலீசில் ஒப்படைத்த டிரைவர்

Published On 2022-12-31 15:16 IST   |   Update On 2022-12-31 15:16:00 IST
  • போலீஸ் இன்ஸ்பெக்டர் பரிசு வழங்கி பாராட்டு
  • ஆட்டோ டிரைவர் சரவணன் பீச் ரோடு பகுதியை சேர்ந்தவர்

நாகர்கோவில்:

நாகர்கோவில், பீச் ரோடு பகுதியை சேர்ந்தவர் சரவணன். ஆட்டோ டிரைவர்.

இவர் நாகர்கோவில் பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறார். கடந்த 28-ந் தேதி இவரது ஆட்டோவில் 2 பவுன் தங்க செயின் ஒன்று கிடந்தது. இதை பார்த்த சரவணன் அந்த நகையை எடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒப்படைத்தார்.

போலீசார் விசாரணையில் அவரது ஆட்டோவில் பயணம் செய்த வாலிபர் நகையை தவற விட்டு சென்றது தெரியவந்தது. அந்த வாலிபர் யார்? என்பது குறித்து போலீசார் பீச் ரோடு பகுதியை சேர்ந்தவர் சரவணன். ஆட்டோ டிரைவர்.சாரணை மேற்கொண்டனர்.

இந்த நிலையில் சரவணன் ஆட்டோவில் நகையைதவற விட்டது திருவனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த பிரமோத் (வயது 40) என்பது தெரிய வந்தது. இவர் துபாயில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.

தற்பொழுது விடுமுறையில் ஊருக்கு வந்த இவர் குமரி மாவட்டம் வில்லுகுறி பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்துவிட்டு நாகர்கோவிலில் உள்ள நகைக்கடையில் நகை வாங்குவதற்காக வந்துள்ளார்.

அப்போது சரவணன் ஆட்டோவில் பயணம் செய்துள்ளார். அப்போது தான் பிரமோத் 2 பவுன் நகையை தவறவிட்டது தெரியவந்தது. இதையடுத்து பிரமோத்திற்கு போலீசார் தகவல் தெரிவித்தனர்.

இன்று காலை கோட்டார் போலீஸ் நிலையத்திற்கு வந்த பிரமோத் நகையின் அடையாளங்களை தெரிவித்தார். இதையடுத்து போலீசார் அவரிடம் 2 பவுன் நகை ஒப்படைத்தனர். நகையை எடுத்துக் கொடுத்த ஆட்டோ டிரைவர் சரவணனுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டதுடன் அவருக்கு நினைவு பரிசையும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமர் வழங்கினார். ஆட்டோவில் தவறவிட்ட இரண்டு பவுன் நகையை எடுத்து போலீசிடம் ஒப்படைத்த ஆட்டோ டிரைவர் சரவணனை போலீசார் மட்டுமின்றி சக ஆட்டோ டிரைவர்களும் பாராட்டினார்கள்.

Tags:    

Similar News