உள்ளூர் செய்திகள்

தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ள காட்சிகளை படத்தில் காணலாம் 

நாகர்கோவில் வலம்புரிவிளை குப்பை கிடங்கில் தீ விபத்து

Published On 2023-02-08 08:15 GMT   |   Update On 2023-02-08 08:15 GMT
  • தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராட்டம்
  • இந்த குப்பை கிடங்கை மாற்றுவதாக வாக்குறுதி அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

நாகர்கோவில்:

நாகர்கோவில் பீச் ரோட்டில் மாநகராட்சிக்கு சொந்தமான வலம்புரி விளை குப்பை கிடங்கு உள்ளது. இங்கு நாகர்கோ வில் மாநகரப் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்பட்டு வந்தது. இதனால் அங்கு மலைபோல் குப்பைகள் தேங்கி கிடப்பதுடன் துர்நாற்றம் வீசுகிறது. தற்பொழுது நாகர்கோவில் நகரில் சேகரிக்கப்படும் குப்பைகள் மக்கும் குப்பை மக்காத குப்பை என பிரித்து வாங்கப்பட்டு வருகிறது.

மக்கும் குப்பைகள் உரமாக்கப்பட்டு வரும் நிலையில் மக்காத குப்பைகளை மட்டும் குப்பை கிடங்கில் கொட்டி வருகிறார்கள். இந்த குப்பை கிடங்கில் அடிக்கடி தீ விபத்து ஏற்படுவது வாடிக்கையாகிவிட்டது. இந்த நிலையில் இன்று காலை 8 மணி அளவில் குப்பை கிடங்கில் இருந்து புகைமண்டலங்கள் வந்தது. இதை பார்த்த மாநகராட்சி ஊழியர்கள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்

பின்னர் இது குறித்து நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரி விக்கப்பட்டது.உடனடியாக நாகர்கோவில் நிலைய தீயணைப்பு வீரர்கள் வலம்புரி விளை குப்பை கிடங்கிற்கு விரைந்து சென்றனர். அங்கு எரிந்த தீயை தண்ணீரை பீச்சு அடித்து அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.ஜே.சி.பி. எந்திரம் மூலமாக குப்பைகள் கிளறப்பட்டு தீ அணைக்கப்பட்டது. தீ கொழுந்து விட்டு எரிந்ததால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.மேலும் துர்நாற்றமும் வீசி வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில் நாகர்கோவில் நகரில் மைய பகுதியில் அமைந்துள்ள இந்த குப்பை கிடங்கை மாற்ற மாநகராட்சி அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே இந்த குப்பை கிடங்கை மாற்றுவதாக வாக்குறுதி அளித்து வருகிறார்கள்.ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இங்கிருந்து வரும் துர்நாற்றத் தின் காரணமாகவும் புகை மண்டலத்தின் காரணமாக வும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதிப்புகுள்ளாகி உள்ளனர். எனவே மேயர் மகேஷ் இந்த விவகாரத்தில் தனி கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

Similar News