உள்ளூர் செய்திகள்
முகுந்தன்
பறக்கை அருகே எலக்ட்ரிசியன் மாயம்
- புகாரின் பேரில் சுசீந்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து முகுந்தனை தேடி வருகிறார்கள்.
- தனது மனைவி நகைகளை கொடுக்காததால் கோபத்தில் வீட்டை விட்டு வெளியே சென்று விட்டதாக தகவல்
நாகர்கோவில்:
பறக்கை அருகே உள்ள சி. டி. எம். புரத்தை சேர்ந்தவர் முகுந்தன் (வயது 50). இவர் எலக்ட்ரிசியன் வேலை செய்து வருகிறார்.
இவர் சம்பவத்தன்று தனது மனைவி சரஸ்வதியிடம் நகைகளை கேட்டு சரஸ்வதி கொடுக்காததால் கோபத்தில் வீட்டை விட்டு வெளியே சென்று விட்டதாகவும் உறவினர் மற்றும் பல்வேறு இடங்களிலும் தேடியும் கண்டுபிடிக்க முடியாததால் சரஸ்வதி இது குறித்து சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சாய்லெட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் ராபர்ட் செல்வ சிங் ஆகியோர் வழக்கு பதிவு செய்து முகுந்தனை தேடி வருகிறார்கள்.