உள்ளூர் செய்திகள்

அருமனை போலீசார் திருட்டு போன கார் நின்றிருந்த இடம் வந்து விசாரித்து காரை மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்போது எடுத்த படம் 

கொல்லங்கோட்டில் மாயமான கார் 1½ மாதத்திற்கு பின் மீட்பு

Published On 2022-12-06 13:50 IST   |   Update On 2022-12-06 13:50:00 IST
  • கேட்பாரற்று நின்றதால் கடத்தியது யார்? போலீசார் விசாரணை
  • அருமனை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சாமுவேல் சம்பவ இடம் வந்து விசாரித்து காரை மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தார்.

கன்னியாகுமரி:

குமரி மாவட்டம் கொல்லங்கோடு போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பின்குளம் பகுதியில் வசிப்பவர் ஆல்பர்ட்.இவரது மனைவி ஷிஜி.இவர்கள் தங்களது காரை வீட்டு முன்பு நிறுத்தி இருந்தனர்.

அந்தக் கார் கடந்த அக்டோபர் மாதம் 26- ந் தேதி திடீரென மாயமானது. பல இடங்களில் தேடியும் கார் கிடைக்காததால் அதனை யாரோ திருடிச் சென்றிருக்கலாம் என 28- ந் தேதி கொல்லங்கோடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

இது தொடர்பாக போலீ சார் வழக்கு பதிவு செய்து காரை தேடி வந்தனர். இந்நிலையில் ஆல்பர்ட்டின் நண்பர், அருமனை வழியாக சென்றார். அப்போது அங்கு திருட்டு போன ஆல்பர்ட்டின் கார் நிற்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து அவர் ஆல்பர்ட்டுக்கு தகவல் தெரிவித்தார். அவர் விரைந்து வந்து விசாரித்த போது ஒரு மாதத்திற்கு மேலாக கார் இப்பகுதியில் நின்று கொண்டி ருப்பதாக அங்கு உள்ளவர்கள் தெரி வித்தனர்.

இதுகுறித்து அருமனை போலீசுக்கு ஆல்பர்ட் தகவல் தெரிவித்தார். அருமனை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சாமுவேல் சம்பவ இடம் வந்து விசாரித்து காரை மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தார். கார் திருடப்பட்டு கொண்டு விடப்பட்டதா? அல்லது கடத்தலுக்காக பயன்படுத்தப்பட்டதா? என்று பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News