உள்ளூர் செய்திகள்

திற்பரப்புக்கு ஆன்மீக சுற்றுலா பஸ் வந்தபோது எடுத்த படம்.

திருவனந்தபுரத்தில் இருந்து குமரி மாவட்ட ஆன்மீக சுற்றுலா தலங்களுக்கு பஸ் சேவை தொடக்கம்

Published On 2022-11-28 07:44 GMT   |   Update On 2022-11-28 07:44 GMT
  • கன்னியாகுமரி யாத்திரை என பெயரிடப்பட்டுள்ளது.
  • இதற்காக ரூ.600 கட்டணமாக வசூலிக்கிறார்கள்.

கன்னியாகுமரி:

நெய்யாற்றின்கரை பணிமனையில் இருந்து கேரள அரசு போக்குவரத்து கழக பட்ஜெட் டூரிசம் செல் மூலமாக கன்னியாகுமரி யாத்திரை என பெயரிடப்பட்டுள்ள இந்த யாத்திரை திருவனந்தபுரம் பஸ் நிலையத்தில் இருந்து தொடங்கியது. தினமும் காலையில் திருவனந்தபுரத்தில் இருந்து புறப்படும் பஸ் திற்பரப்பு வருகிறது.

அங்கு திற்பரப்பு மகாதேவர் ஆலய தரிசனம் முடித்து விட்டு குமார கோவில் தரிசனத்துக்காக செல்கிறது. அங்கிருந்து நேராக வட்டக்கோட்டைக்கு செல்லும் பஸ் மாலையில் கன்னியாகுமரி திருப்பதி கோவில், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் தரிசனம் முடிந்த பின்னர் திருவனந்தபுரத்துக்கு செல்கிறது.

இதற்காக ரூ.600 கட்டண மாக வசூலிக்கிறார்கள். குழுக்களாக சேர்ந்து முன் பதிவு செய்து ஒரு முறை 50 பேர் வரை அழைத்துச்செல்கிறார்கள். திருவனந்தபுரம் பகுதியில் இருந்து கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கோவில்களுக்கு வர விரும்புபவர்களுக்கு இந்த பயண திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

நேற்று முதல் பஸ் திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டு திற்பரப்புக்கு வந்தது. அங்குள்ள மகாதேவர் ஆலயத்தில் தரிசனம் செய்த பின்னர் பஸ்சில் வந்தவர்கள் கோவிலை சுற்றி பார்த்துவிட்டு நேராக குமாரகோவில் சென்றார்கள். அதன் பிறகு மற்ற ஆன்மீக சுற்றுலா தலங்களுக்கும் சென்று மாலையில் திருவனந்தபுரம் புறப்பட்டு சென்றது.

Tags:    

Similar News