உள்ளூர் செய்திகள்

புகைப்பட கண்காட்சியை பொதுமக்கள் பார்த்தபோது எடுத்தபடம்.

தக்கலை அருகே அரசின் திட்டங்களை விளக்கும் புகைப்பட கண்காட்சி

Published On 2023-01-11 13:15 IST   |   Update On 2023-01-11 13:15:00 IST
  • மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் நடைபெற்றது.
  • அரசின் திட்டங்களை தெரிந்துகொண்டு பொதுமக்கள் பயன்பெற வேண்டும்.

நாகர்கோவில்:

தமிழக அரசு துறைகளின் கீழ் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரு கிறது.இந்த திட்டங்களை மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் புகைப்படக் கண் காட்சி நடத்தப்படுகிறது.

அதன்படி தக்கலை ஒன்றியம், திக்கணங்கோடு பகுதியில் அரசின் சாத னைகள் மற்றும் சிறப்பு திட்டங்கள் குறித்து பொது மக்கள் அறிந்து கொண்டு பயன் பெறும் வகையில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் புகைப்படக் கண் காட்சி நடைபெற்றது.

இதுகுறித்து கலெக்டர் அரவிந்த் கூறுகையில், ஏழை, எளிய, கிராமப்புற மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்கள் குறித்து பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் புகைப்பட கண்காட்சி நடக்கிறது.

அரசின் திட்டங்களை தெரிந்துகொண்டு அனைத்துத் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் அரசு நலத்திட்ட உதவிகளை பொதுமக்கள் பெற்று பயன்பெற வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News