உள்ளூர் செய்திகள்

குடிநீர் குழாயில் பிடித்த தண்ணீர் கலங்கலாக உள்ளதை படத்தில் காணலாம்.

கண்டமங்கலம் ஊராட்சியில் குடிநீரில் கழிவு நீர் கலந்து வருவதால் நோய் பரவும் அபாயம்

Published On 2022-11-11 07:59 GMT   |   Update On 2022-11-11 07:59 GMT
  • கண்டமங்கலம் ஊராட்சி மூலம் வழங்கப்பட்ட குடிநீர் களங்கிய நிலையில் சேறும் சகதிகமாக வந்தது.
  • சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் கிராம ஊராட்சியில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த குடும்பங்கள் பயன்படுத்தும் வகையில் கண்டமங்கலம் ஊராட்சி மூலம் குடிநீர் குழாய்கள் மூலம் வழங்கி வருகின்றனர். ‌‌ கண்டமங்கலம் ஊராட்சி மூலம் வழங்கப்பட்ட குடிநீர் களங்கிய நிலையில் சேறும் சகதிகமாக வந்தது. கண்டமங்கலம் வாய்க்கால் மேட்டு தெரு பகுதியில் குடிநீர் கலங்கிய நிலையில் வந்ததால் பொதுமக்கள் குடிநீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. தொடர்ந்து குடிநீர் கலங்களாக வந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்தக் குடிநீரை பருகினால் காய்ச்சல், காலரா போன்ற கொடிய நோய்கள் வரக்கூடிய நிலை உள்ளது. எனவே உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு குடிநீரில் சாக்கடை நீர் கலந்து வருகிறதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பதை ஆய்வு செய்து சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News