உள்ளூர் செய்திகள்

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில் வன்கொடுமை தடுப்பு சட்டம் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வன்கொடுமை வழக்குகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் கலெக்டர் ஸ்ரீதர் அறிவுரை

Published On 2022-07-01 07:33 GMT   |   Update On 2022-07-01 07:33 GMT
  • கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வன்கொடுமை வழக்குகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் கலெக்டர் ஸ்ரீதர் அறிவுரை வழங்கினார்.
  • மாணவர்களிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படாவண்ணம் தடுத்திட பள்ளிகளில் சமூக நல்லிணக்கம் மேற்கொள்ள வேண்டும் .

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையினர் சார்பில் வன்கொடுமை தடுப்பு சட்டம் குறித்த மாவட்ட அளவிலான விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கி பேசினார். அவர் கூறியதாவது:-

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில், வன்கொடுமை தடுப்பு சட்டம்-1989 மற்றும் விதிகள் 1995-ன்கீழ் மாவட்ட அளவிலான விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டம்ஒவ்வொரு ஆண்டும் காலாண்டுவாரியாக நடத்தப்பட்டு வருகிறது. இக்கண்காணிப்புக் குழு கூட்டத்தில், குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு காலாண்டில் பதிவு செய்யப்பட்ட வன்கொடுமை வழக்குகள் குறித்தும், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டன. இக்கூட்டத்தில், சென்ற ஆய்வுக்கூட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தொடர்பாக நிலுவையில்உள்ள வழக்குகள்குறித்தும், நீதிமன்றவிசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்ப டாத நிலையில் உள்ள வழக்குகளின் எண்ணி க்கை குறித்தும், நீதிமன்ற விசாரணையில் நிலுவை வழக்குகள்குறித்தும், பிழையுடையதாக கருதப்பட்ட வழக்குகள் குறித்தும், அவ்வழக்குகளின் மீதுஎடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் விரிவாகஆய்வு மேற்கொள்ளப்பட்டு, அனைத்து வன்கொடுமை வழக்குகள்மீதும் விரைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், வன்கொடுமையால் பாதிக்கப்பட்டோருக்குத் தீருதவி உதவித்தொகை விரைந்து வழங்கிடவும் அறிவுறுத்தப்பட்டது. மேலும், வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின்கீழ் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு அரசு அளிக்கும் தீருதவி, ஓய்வூதியம், வேலைவாய்ப்பு போன்ற சலுகைகள் விரைந்து கிடைத்திட அறிவுறுத்தப்பட்டது. 

எதிர்வரும் காலங்களில் வன்கொடுமை நிகழ்வுகள் நடைபெறா வண்ணம் விழிப்புணர்வு முகாம் பெருமளவில் நடத்திட காவல்துறையினருக்கும் இக்குழு உறுப்பின ர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டது. மேலும், மேல்நிலைபள்ளிகளில் மாணவர்களிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படாவண்ணம் தடுத்திட பள்ளிகளில் சமூக நல்லிணக்கம் குறித்த விழிப்புணர்வினை பள்ளி மேலாண்மைக்குழு, இக்குழு உறுப்பினர்கள் மற்றும் காவல்துறையினர் இணைந்து மேற்கொள்ள வேண்டும் . இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில்குழு உறுப்பினர்மணி க்கண்ணன்எம்.எல்.ஏ, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் சாந்தி, வேளாண்மை துணை இயக்குநர் விஜயராகவன், இணை இயக்குநர் வேளாண்மை (திட்டம்) சுந்தரம், கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜலட்சுமி, தனி தாசில்தார் (ஆதிதிராவிடர் நலம்) நடராஜன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News