உள்ளூர் செய்திகள்
ஹரிபத்மன் பாலியல் தொல்லை கொடுத்தது உண்மைதான்- முன்னாள் மாணவிகள் சாட்சியம்
- கேரளாவில் 5 முன்னாள் மாணவிகள், சென்னையில் 2 மாணவிகள் என இதுவரை 7 மாணவிகள் ஹரிபத்மனுக்கு எதிராக வாக்குமூலம் அளித்துள்ளனர்.
- மேலும் 4 மாணவிகள் ஹரிபத்மன் தொடர்பாக வாக்குமூலம் அளிக்க முன் வந்துள்ளனர்.
சென்னை:
கலாசேத்ரா பேராசிரியர் ஹரிபத்மனுக்கு எதிராக கேரள முன்னாள் மாணவிகள் 5 பேர் அளித்துள்ள சாட்சியமே அவருக்கு எதிராக திரும்பி உள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹரிபத்மன் பாலியல் தொல்லையில் ஈடுபட்டது உண்மைதான் என்று முன்னாள் மாணவிகள் வாக்குமூலம் அளித்திருப்பதாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் இன்று தெரிவித்தார்.
கேரளாவில் 5 முன்னாள் மாணவிகள், சென்னையில் 2 மாணவிகள் என இதுவரை 7 மாணவிகள் ஹரிபத்மனுக்கு எதிராக வாக்குமூலம் அளித்திருப்பது தெரிய வந்துள்ளது.
இன்று மேலும் 4 மாணவிகள் ஹரிபத்மன் தொடர்பாக வாக்குமூலம் அளிக்க முன் வந்துள்ளனர் என்றும் அதிகாரி கூறினார்.