கடத்தூர், ராமியணஅள்ளி, ஆர். கோபிநாதம்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்
- கடத்தூர் மின்கோட்டத் திற்குட்பட்ட ராமியண அள்ளி துணை மின் நிலையம், ஆர். கோபிநாதம்பட்டி துணை மின் நிலையம் மற்றும் கடத்தூர் துணை மின் நிலையங்களில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.
- நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 2- மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும்.
பாப்பிரெட்டிப்பட்டி,
தருமபுரி மாவட்டம், கடத்துாா் மின்வாரிய செயற்பொறியாளர் ரவி வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-
கடத்தூர் மின்கோட்டத் திற்குட்பட்ட ராமியண அள்ளி துணை மின் நிலையம், ஆர். கோபிநாதம்பட்டி துணை மின் நிலையம் மற்றும் கடத்தூர் துணை மின் நிலையங்களில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. அதனால்
ராமியணஅள்ளி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட ராமியணஅள்ளி, சிந்தல்பாடி, பசுவாபுரம், காவேரிபுரம், தென்கரைக்கோட்டை, பூத நத்தம் ஆகிய கிராமங்களுக்கும், மற்றும் இதை சுற்றியுள்ள இதர கிராமங்களிலும் மின் நிறுத்தம் செய்யப்படும்.
ஆர்.கோபிநாதம்பட்டி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பொம்மட்டி, நவலை, ஆண்டிப்பட்டி, ஜடையம்பட்டி, கர்த்தான்குளம், ராமாபுரம் ஆகிய கிராமங்களுக்கும், மற்றும் அதை சுற்றியுள்ள இதர கிராமங்களுக்கும் மின்சாரம் நிறுத்தப்படும்.
கடத்தூர் துணை மின் நிலையத்தின் மூலம் மின்சாரம் பெறும் சுங்கர அள்ளி, ரேகடஅள்ளி ,கடத்தூர், சில்லார அள்ளி,தேக்கல் நாயக்கனஅள்ளி, புது ரெட்டியூர், நல்லகுட்ல அள்ளி, புட்டிரெட்டிபட்டி, மணியம்பாடி, ஒடசல்பட்டி, புளியம்பட்டி, கதிர் நாயக்கனஅள்ளி, ராணி மூக்கனூர் லிங்கநாயக்கனஹள்ளி, மோட்டாங் குறிச்சி, நத்தமேடு ஆகிய கிராமங்களுக்கும் மற்றும் அதைச் சுற்றியுள்ள இதர கிராமங்களுக்கும் நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 2- மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.