உள்ளூர் செய்திகள்

கடம்பூரில் சீனிவாச பெருமாள் கோவிலில் கும்பாபிசேக விழா நடைபெற்றது.


கடம்பூர் சீனிவாச பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்

Published On 2022-09-10 08:55 GMT   |   Update On 2022-09-10 08:55 GMT
  • விழாவையொட்டி ரூ.4½ கோடியில் திருப்பணிகள் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக பெருமாள், பிள்ளையார், சிவன் ஆகிய சாமிகளுக்கு தனித்தனி கோபுரங்கள் கட்டப்பட்டது.
  • இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் எஸ்.வி.எஸ்.பி.சந்திரராஜா மற்றும் கடம்பூர் ஜமீன் குடும்பத்தினர் செய்திருந்தனர்.

கயத்தாறு:

கடம்பூரில் சீனிவாச பெருமாள் கோவிலில் கும்பாபிசேக விழா நடைபெற்றது. இதையொட்டி ரூ.4½ கோடியில் திருப்பணிகள் நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக பெருமாள், பிள்ளையார், சிவன் ஆகிய சாமிகளுக்கு தனித்தனி கோபுரங்கள் கட்டப்பட்டது.

கடந்த 5 நாட்களாக காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் பட்டர்கள், சென்னை அகலோம் பட்டர்கள் கும்பகோணம் பட்டர்கள் உள்பட 51 பட்டர்கள் பல்வேறு யாகங்கள், ‌ஹோமங்கள் மற்றும் பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்தனர். தொடர்ந்து நேற்று காலை 7.30 மணி முதல் 10.30 மணி வரை 11 கும்பங்களுக்கு அபிேஷகத்துடன் கவசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிசேகம் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கயத்தாறு யூனியன் தலைவர் மற்றும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தென்மண்டல பொறுப்பாளரும், தலைமை க்கழக செயலாளருமான எஸ்.வி.எஸ்.பி.மாணிக்கராஜா, கடம்பூர் முன்னாள் பேரூராட்சி மன்றத் தலைவர் நாகராஜா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் எஸ்.வி.எஸ்.பி.சந்திரராஜா மற்றும் கடம்பூர் ஜமீன் குடும்பத்தினர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News