ஜே.எஸ்.எஸ். மகா வித்யா பீடம் சார்பில் கலாசார பக்தி திருவிழா
- ஜெகத்குரு சிவராத்திரி மகா சுவாமிகளின் தேர்த்திருவிழா நடைபெற்றது.
- 116 தம்பதிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.
ஊட்டி
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் கல்வி பணியாற்றி வரும் ஜே.எஸ்.எஸ். பார்மசி கல்லூரியின் தலைமையிடமான ஜே.எஸ்.எஸ். மகாவித்ய பீடம் மைசூர் மாவட்டம் சுத்தூர் திருத்தலத்தில் அமைந்துள்ளது.
இங்கு ஒரு வாரம் தேர்த்திருவிழா நடைபெறும். தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, டெல்லி, அமெரிக்கா என உலகம் முழுவதும் சமூக பணியுடன் கல்விப்பணி கலாசாரப்பணியை சிறப்பாக ஆற்றிவரும் ஜே.எஸ்.எஸ். மகாவித்ய பீடத்தின் தலைமை குருவான சிவயோகி ஆதி ஜெகத்குரு சிவராத்திரி மகா சுவாமிகளின் தேர்த்திருவிழா மைசூர் அருகேயுள்ள சுத்தூர் திருத்தலத்தில் நடைபெற்றது. இந்த ஆண்டு 116 தம்பதிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. ஜெகத்குரு ஸ்ரீ சிவராத்திரி தேசிகேந்திர மகா சுவாமிகளின் தலைமையில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்துகொண்ட அனைத்து தம்பதிகளுக்கும் தங்கத்தாலி, பட்டுபுடவை, பட்டுவேட்டி மற்றும் பாத்திரங்கள் இலவசமாக வழங்கப்பட்டது. இதில் ஊட்டியில் செயல்படும் ஜே.எஸ்.எஸ். கல்லூரியின் அலுவலர்கள் முதல்வர் டாக்டர் தனபால் மற்றும் முதன்மை அலுவலர் பசவண்ணா தலைமையில் தன்னார்வ பணிகளை செய்தனர்.