உள்ளூர் செய்திகள்

இளைஞர்களுக்கு வேைல வாய்ப்பு பயிற்சி

Published On 2022-11-23 10:00 GMT   |   Update On 2022-11-23 10:00 GMT
  • தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு , சுய தொழில் செய்வதற்கு ஏதுவாக இலவச திறன் பயிற்சிகள் நடத்துகிறது.
  • 25-ந்தேதி (வெள்ளிகிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 வரை பள்ளிபாளையம் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் நடைபெறவுள்ளது.

நாமக்கல்:

நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தீனதயாள் உபத்யாய கிராமின் கௌசல் யோஜனா , ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் , தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் , பிரதமமந்திரி கௌசல் விகாஸ் யோஜனா , மாவட்ட தொழில் மையம் மற்றும் தமிழ்நாடு ஆதிதிராவிடர் குடியிருப்பு மேம்பாட்டு கழகம் போன்ற திட்டங்களில் தையல், அலங்கார ஆடை வடிவமைப்பு, அழகுக் கலை, ஓட்டுநர், உதவி செவிலியர், 4 சக்கர வாகனம் பழுது நீக்குதல், கணினி பயிற்சிகள், சில்லரை விற்பனை வணிகம், பி.பி.ஓ., துரித உணவு தயாரித்தல், கைபேசி பழுது நீக்குதல் போன்ற இலவச திறன் பயிற்சிகள் வழங்கி தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு , சுய தொழில் செய்வதற்கு ஏதுவாக இலவச திறன் பயிற்சிகள் நடத்துகிறது.

இப்பயிற்சிக்கு இளைஞர்கள், இளம்பெண்களை தேர்வு செய்யும் பொருட்டு இளைஞர் திறன் திருவிழா வருகிற 25-ந்தேதி (வெள்ளிகிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 வரை பள்ளிபாளையம் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் நடைபெறவுள்ளது. எனவே, முகாமில் பள்ளிபாளையம் வட்டாரத்தைச் சேர்ந்த ஆண் மற்றும் பெண் கலந்து கொண்டு பயிற்சியினை தேர்வு செய்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News