உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

பழனி அருகே வீட்டை உடைத்து நகை-பணம் கொள்ளை

Published On 2022-10-22 04:38 GMT   |   Update On 2022-10-22 04:38 GMT
  • வீட்டுக்குள் புகுந்து பீரோவில் இருந்த 4 பவுன் தங்கநகை, ரூ.7ஆயிரம் ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
  • கைரேகை நிபுணர்கள், தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது.

பழனி:

பழனி அருகே சின்னகலையம்புத்தூர் சி.டி.சி காலனியை சேர்ந்தவர் நடராஜ்(61). போக்குவரத்து கழகத்தில் ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி இந்துமதி(50). 2 பேரும் வீட்டின் மேல்தளத்தில் குடியிருந்து வருகின்றனர்.

கீழ்வீட்டில் இவரது மகன் பிரேம்குமார்(29) வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று இரவுேவலைக்கு பிரேம்குமார் சென்றுவிட்டார். இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டின் பூட்டைஉடைத்து உள்ளே புகுந்தனர்.

அங்கு பீரோவில் இருந்த 4 பவுன் தங்கநகை, ரூ.7ஆயிரம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர். மேலும் அதேபகுதியை சேர்ந்த பாலமுருகன், மாரிமுத்து ஆகியோர் வீட்டில் புகுந்த கொள்ளையர்கள் எதுவும் கிடைக்காததால் ஏமாற்றத்துடன் சென்றனர்.

அடுத்தடுத்த வீடுகளில் கொள்ளை முயற்சி சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் டி.எஸ்.பி சிவசக்தி தலைமையில் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள், தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது.

பழனி தாலுகா போலீசார் வழக்குபதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். பழனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தனியாக இருக்கும் வீடுகளை குறிவைத்து கொள்ளைச்சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. கடந்த சில நாட்களாக அமைதியாக இருந்த கொள்ளையர்கள் மீண்டும் கைவரிசையை காட்ட தொடங்கியுள்ளது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் பல கொள்ளை சம்பவங்களில் இதுவரை யாரும் பிடிபடவில்லை. எனவே போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News