உள்ளூர் செய்திகள்

கோவையில் மூதாட்டியிடம் நகை பறிப்பு

Published On 2023-05-29 10:02 GMT   |   Update On 2023-05-29 10:02 GMT
  • ஆரோக்கியமேரி பூச்செடிகளை நடவு செய்தார்.
  • வாலிபர் குடிப்பதற்கு கொஞ்சம் தண்ணீர் கேட்டார்.

கோவை,

கோவை சேரன்மாநகரை சேர்ந்தவர் ஆரோக்கியமேரி (வயது 58). இவர் அவரது வீட்டின் முன்பு பூச்செடிகளை நடவு செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் அவரிடம் முகவரி விவரங்களைக் கேட்டார்.

இதையடுத்து அவரிடம் சிறிது நேரம் பேசிக்கொ ண்டிருந்த அந்த வாலிபர் குடிப்பதற்கு கொஞ்சம் தண்ணீர் தருமாறு கேட்டார். உடனே ஆரோக்கியமேரியும் வீட்டுக்கு ள் சென்று தண்ணீர் கொண்டு வந்தார்.

இதையடுத்து அந்த வாலிபர் தண்ணீரை வாங்கி குடித்தார். அதன்பின்னர், ஆரோக்கியமேரி வீட்டுக்குள் சென்றார். அப்போது அவரை பின்தொ டர்ந்து சென்ற வாலிபர் அவரது கழுத்தில் கிடந்த 6 பவுன் நகையை பறித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் சத்தம் போட்டார். உடனே அந்த வாலிபர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். இதற்கிடையே சத்தம் கேட்டு அங்கு திரண்ட அக்கம் பக்கத்தினர், அந்த வாலிபரை பிடிக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. அதற்குள் அவர் தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து பீளமேடு போலீ சாருக்கு தகவல் தெரிவிக்க ப்பட்டது.

போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் நகையை பறித்து சென்ற வாலிபர் ஏதேனும் தடயங்களை விட்டுச் சென்று ள்ளனரா? என்றும் சோதனை செய்தனர். குடிக்க தண்ணீர் கேட்பது போல் நடித்து நகையை பறித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபர ப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்கு ப்பதிவு செய்து நகையை பறித்து சென்ற வாலிபரை தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News