உள்ளூர் செய்திகள்

களக்காடு அருகே ஆசிரியையிடம் நகை பறிப்பு

Published On 2022-12-08 09:42 GMT   |   Update On 2022-12-08 09:42 GMT
  • களக்காடு அருகே உள்ள கீழசடையமான்குளத்தை சேர்ந்தவர் லாரன்ஸ். விவசாயி. இவரது மனைவி எஸ்தர் (வயது45). இவர் டோனாவூரில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக உள்ளார்.
  • சம்பவத்தன்று இவர் அதே பள்ளியில் ஆசிரியையாக பணிபுரியும் வீரவநல்லூர் அருகே உள்ள புதுக்குடியை சேர்ந்த டெய்சி என்பவருடன் மொபட்டில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார்.

களக்காடு:

களக்காடு அருகே உள்ள கீழசடையமான்குளத்தை சேர்ந்தவர் லாரன்ஸ். விவசாயி. இவரது மனைவி எஸ்தர் (வயது45). இவர் டோனாவூரில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக உள்ளார்.

ஹெல்மெட் அணிந்த நபர்

சம்பவத்தன்று இவர் அதே பள்ளியில் ஆசிரியையாக பணிபுரியும் வீரவநல்லூர் அருகே உள்ள புதுக்குடியை சேர்ந்த டெய்சி என்பவருடன் மொபட்டில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார். டெய்சி மொபட்டை ஓட்டினார். எஸ்தர் பின்னால் அமர்ந்திருந்தார்.

களக்காடு-சேரன்மகாதேவி ரோட்டில் பிளவக்கல் இசக்கியம்மன் கோவிலுக்கு அருகே சென்று கொண்டிருந்த போது, பின்னால் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர் எஸ்தரின் கைப்பையை பிடித்து இழுத்தார். ஆனால் எஸ்தர் கைப்பையை கெட்டியாக பிடித்து கொண்டார்.

நகை பறிப்பு

இதனால் கைப்பையை பறிக்க முடியாத மர்ம நபர் எஸ்தர் கழுத்தில் அணிந்திருந்த தங்க தாலி செயினை பறிப்பதற்காக பிடித்து இழுத்தார். எஸ்தர் சுதாரித்துக் கொண்டு செயினை வலுவாக பிடித்து கொண்டார். இதில் செயின் ஒரு பகுதியும், கொக்கியும் மர்ம நபர் கையில் சிக்கியது. அதனுடன் அவர் தப்பி சென்று விட்டார்.

பறிக்கப்பட்ட செயினின் எடை 1 பவுன் ஆகும். இதுபற்றி எஸ்தர் களக்காடு போலீசில் புகார் செய்தார். ஏர்வாடி இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஆதம் அலி, சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி மற்றும் போலீசார் வழக்கு ப்பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News