உள்ளூர் செய்திகள்

 காங்கயம் ஒன்றிய செயலாளர் என்.எஸ்.என்.நடராஜ் தலைமையில் இனிப்பு வழங்கப்பட்ட போது எடுத்த படம்.

நத்தக்காடையூர் பகுதியில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா

Published On 2023-02-25 13:17 IST   |   Update On 2023-02-25 13:17:00 IST
  • ஜெயலலிதாவின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
  • மளிகை சுப்பிரமணி தங்கவேல், வெள்ளியங்கிரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

காங்கயம் :

நத்தக்காடையூர் பகுதி அ.தி.மு.க. சார்பில் கடைவீதியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் எஸ்.இளங்கோ தலைமை தாங்கினார். காங்கயம் ஒன்றிய செயலாளர் என்.எஸ்.என்.நடராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஜெயலலிதாவின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

விழாவில் பழையகோட்டை ஊராட்சி முன்னாள் தலைவர் ராசு சண்முக சேகரன், அ.தி.மு.க. நிர்வாகிகள் பி.எஸ்.ஆர்.சுப்பிரமணியம், எம்.கே.குமாரசாமி, சிவு சென்னியப்பன், என்.பொன்னுச்சாமி, தம்பி பழனிச்சாமி, ஜெயபிரகாஷ், ஆர்.எஸ். கலைமணி, மளிகை சுப்பிரமணி தங்கவேல், வெள்ளியங்கிரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News