உள்ளூர் செய்திகள்

மாமல்லபுரத்தில் சர்வதேச "சர்பிங் லீக்" போட்டி- இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றது ஜப்பான்

Published On 2023-08-17 21:10 IST   |   Update On 2023-08-17 21:10:00 IST
  • அனைத்து வயது பிரிவிலும் இந்தியா இறுதிச்சுற்று தகுதியை இழந்தது.
  • அனைத்திலும் ஜப்பான் வீரர்கள் மட்டுமே இன்று வரை முன்னிலையில் இருந்தனர்.

மாமல்லபுரம்:

தமிழ்நாடு அலைசறுக்கு சங்கம் மற்றும் இந்திய அலைசறுக்கு கூட்டமைப்பு இணைந்து, சர்வதேச லீக் போட்டியை மாமல்லபுரத்தில் நடத்துகிறது. கடந்த 14ம் தேதி போட்டியின் இயக்குனர் டைராபர்ட் சோராட்டி போட்டியை துவக்கி வைத்தார்.

இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், இந்தோனேசியா, மடகாஸ்கர், பிலிப்பைன்ஸ், ஜப்பான், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, மாலத்தீவு உள்ளிட்ட 10 நாடுகளில் இருந்து ஆண்கள்-பெண்கள் என 70 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

இதில் 4வது நாளான இன்று முதல் முறையாக பெண்கள் அணியினர் களம் இறங்கி சாகசம் செய்தனர். அனைத்து வயது பிரிவிலும் இந்தியா இறுதிச்சுற்று தகுதியை இழந்தது. அனைத்திலும் ஜப்பான் வீரர்கள் மட்டுமே இன்று வரை முன்னிலையில் இருந்தனர். இறுதிச்சுற்றுக்கான தகுதியையும் பெற்றுள்ளனர்.

இப்போட்டிகள் நாளை மறுநாள் வரை நடைபெறுகிறது. கடற்கரை கோயில் வடபகுதியில் சுற்றுலா பயணிகள் அமர்ந்து போட்டியை பார்க்க பிரத்யேக மேடை அமைக்கப்பட்டுள்ளது. கட்டணம் ஏதும் கிடையாது.

Tags:    

Similar News