உள்ளூர் செய்திகள்
கோத்தகிரி தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி முகாம்
- ஜமாபந்தி அலுவலர் கண்ணன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார்.
- பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் 891 பெறப்பட்டன.
அரவேனு,
தமிழகத்தில் வருவாய்த்துறை சார்பில் பொதுமக்களின் குறைகளை தீர்க்கவும், கிராம நிர்வாக அலுவலர்கள் பராமரிக்கும் கணக்குகளை ஆய்வு செய்யவும் ஜமாபந்தி முகாம் நடத்தப்படுகிறது.
கோத்தகிரி தாசில்தார் அலுவலகத்தில் தொடங்கிய முகாமிற்கு ஜமாபந்தி அலுவலரும், மாவட்ட டாஸ்மாக் மேலாளருமான கண்ணன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார்.
நேற்று நெடுகுளா வருவாய் வட்டத்திற்கு உட்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் 891 பெறப்பட்டன.
இந்த மனுக்கள் மேல் நடவடிக்கைக்காக சம்பந்தபட்ட துறை அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இன்று கோத்தகிரி வட்டத்திற்கு உட்பட்ட கிராமங்களுக்கான முகாம் நடைபெறுகிறது.