உள்ளூர் செய்திகள்

அமைச்சர் செஞ்சி மஸ்தான் நலத்திட்ட உதவி வழங்கினார்.

செஞ்சியில் ஜமாபந்தி நிறைவு: 302 பயனாளிகளுக்கு ரூ.1. 31 கோடி நலத்திட்ட உதவிகள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் வழங்கினார்

Published On 2022-06-16 15:05 IST   |   Update On 2022-06-16 15:05:00 IST
  • செஞ்சியில் ஜமாபந்தி நிறைவு: 302 பயனாளிகளுக்கு ரூ.1. 31 கோடி நலத்திட்ட உதவிகளை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வழங்கினார்.
  • மொத்தம் 302 பயனாளிகளுக்கு ரூ. 1 கோடியே 31 லட்சத்து 33 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

விழுப்புரம்:

செஞ்சி வட்டத்தில் 1431-ம் பசலி ஜமாபந்தி கடந்த 1-ந் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. திண்டிவனம் உதவி கலெக்டர் அமீத் தலைமை தாங்கி பொதுமக்களிடம் மனுக்களை பெற்று நடவடிக்கை மேற்கொண்டு வந்தார்.

மேற்படி ஜமாபந்தி நிறைவு விழா மற்றும் பெறப்பட்ட மனுக்களின் மீது நடவடிக்கை மேற்கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று செஞ்சி தாலுகா அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திண்டிவனம் உதவி கலெக்டர் அமீத் தலைமை தாங்கினார். தாசில்தார் பழனி வரவேற்றார்.

இதில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது அவர் 71 பயனாளிகளுக்கு பட்டா மாற்ற ஆணை, 14 பேருக்கு உட்பிரிவு பட்டா மாற்றம், 100 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை ஆணை, 43 பேருக்கு மின்னணு குடும்ப அட்டை, 20 பேருக்கு பழங்குடியினர் நலவாரிய அட்டை, 45 நபர்களுக்கு பிரதம மந்திரி தொகுப்பு வீடுகள் கட்ட ஆணை மற்றும் 9 பயனாளிகளுக்கு விவசாயத் துறை தோட்டக்கலை சார்பிலும் நலத்திட்ட உதவிகள் என மொத்தம் 302 பயனாளிகளுக்கு ரூ. 1 கோடியே 31 லட்சத்து 33 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் செஞ்சி ஒன்றிய குழு தலைவர் விஜயகுமார், வல்லம் ஒன்றிய குழு தலைவர் அமுதா ரவிக்குமார், வல்லம் ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை, ஒன்றிய பொருளாளர் தமிழரசன், தனி தாசில்தார் நெகருன்னிசா, துணை தாசில்தார் வெங்கடேசன், வருவாய் ஆய்வாளர்கள் கண்ணன், பரமசிவம், கீதா, கார்த்திகேயன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News