உள்ளூர் செய்திகள்
நாமக்கல்லில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் உண்ணாவிரதம்
- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ – ஜியோ அமைப்பின்சார்பில், நாமக்கல் பார்க் ரோட்டில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
- இந்த போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அரசு பணியாளர்கள் கலந்துகொண்டனர்.
நாமக்கல்:
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஒய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், சம்பள முரன்பாடுகளை களைய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ – ஜியோ அமைப்பின்சார்பில், நாமக்கல் பார்க் ரோட்டில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அரசு பணியாளர்கள் கலந்துகொண்டனர்.