உள்ளூர் செய்திகள்
குஞ்சப்பனையில் பலாப்பழம் விற்பனை மும்முரம்
- மரங்களில் பலாப்பழங்கள் அதிக அளவு காய்த்துள்ளன,
- இயற்கை முறையில் பழங்கள் இருப்பதால் சுற்றுலா பயணிகள் வாங்கி செல்கின்றனர்.
கோத்தகிரி,
கோத்தகிரியை அடுத்த முள்ளூர், மாமரம், குஞ்சப்பனை பகுதிகளில் தற்போது பலாப்பழ சீசன் துவங்கி உள்ளதால் மரங்களில் பலாப்பழங்கள் அதிக அளவு காய்த்துள்ளன, மரங்களிலேயே காய்கள் பழுத்து தொங்குவதால் அந்த பகுதி முழுவதும் பலாப்பழ வாசனை வீசி வருகிறது.
இந்த பழங்களை சுற்றுலா பயணிகளும் வாங்கி செல்கின்றனர். குஞ்சப்பனையில் உள்ள பலாப்பழ வியாபாரிகள் தங்களின் தோட்டங்களில் இருந்து பழங்களை பறித்து வந்து விற்பணை செய்து வருகின்றனர். இயற்கை முறையில் பழங்கள் இருப்பதால் சுற்றுலா பயணிகள் விருப்பமுடன் வாங்கி செல்கின்றனர். ஒரு முழு பலாபழம் 100 ரூபாய்க்கும் மேல் விற்பனை ஆகிறது.