உள்ளூர் செய்திகள்

இன்றும், நாளையும் கன மழை பெய்யும்

Published On 2022-08-30 15:41 IST   |   Update On 2022-08-30 15:41:00 IST
  • சில இடங்களில் மிக கன மழை பெய்து வருகிறது.
  • ராசிபுரத்தில் நேற்றுமுன்தினம் ஒரே நாளில் 200 மி.மீ மழை கொட்டியது.

சேலம்:

சேலம், நாமக்கல் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது.

சில இடங்களில் மிக கன மழை பெய்து வருகிறது. ராசிபுரத்தில் நேற்றுமுன்தினம் ஒரே நாளில் 200 மி.மீ மழை கொட்டியது.இதனிடையே இன்று மற்றும் நாளையும் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது-

சேலம், நாமக்கல் மாவட்டங்களில் இன்று (30 -ந் தேதி மற்றும் நாளை 31 -ந் தேதிகளில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.இதனால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News