உள்ளூர் செய்திகள்

கலெக்டர் மகாபாரதி.

ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கு தகவல் தொழில்நுட்ப பயிற்சி

Published On 2023-08-09 09:58 GMT   |   Update On 2023-08-09 09:58 GMT
  • அனிமேசன் சம்பந்தப்பட்ட பயிற்சியை பெற 18 முதல் 28 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • முன்னனி ஐ.டி. நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற வழிவகை செய்யப்பட உள்ளது.

தரங்கம்பாடி:

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ), TCS iON நிறுவனத்துடன் இணைந்து 12-ம் வகுப்பு, பட்டப்படிப்பு, பட்டயப்ப டிப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு தகவல் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட பயிற்சிகள் மற்றும் அனிமேசன் சம்பந்த ப்பட்ட பயிற்சிகள் இணை யதளம் வழியாக கற்றுத்தந்து முன்னனி ஐ.டி. நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற வழிவகை செய்யப்பட உள்ளது.

தகவல் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட பயிற்சிகளை பெற பி.இ., பி.டெக்., பி.சி.ஏ., பி.எஸ்.சி. (சி.எஸ்)., பி.எஸ்.சி. (சி.எஸ் & ஐ.டி)., எம்.சி.ஏ., எம்.எஸ்.சி., (சி.எஸ்)., எம்.எஸ்.சி (சி.எஸ் & ஐ.டி)., ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்த மாணவர்கள் அல்லது கல்லூரிகளில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள், 18 முதல் 28 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

அனிமேசன் சம்பந்தப்பட்ட பயிற்சியை பெற 12-ம் வகுப்பு அல்லது ஐ.டி.ஐ தேர்ச்சி பெற்ற 18 முதல் 28 வயது வரை உள்ள வர்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும், TCS iON நிறுவனத்தால் நடத்தப்படும் தகுதி தேர்வில் என்.க்யூ.டி. தேர்ச்சி பெற வேண்டும்.

இத்தேர்வு முறையானது ஆங்கில வழியில் TCS iON நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட தேர்வு மையங்களான சென்னை, கோயம்புத்தூர், மதுரை, சேலம் மற்றும் திருநெல்வேலி ஆகிய தேர்வு மையங்களில் நடைபெறும்.

இதில் தேர்ச்சி பெறும் பட்சத்தில் TCS iON நிறுவனத்தால் வழங்கப்படும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் அனிமேஷன் சம்பந்தப்பட்ட பயிற்சியில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் சேர்ந்து பயிற்சி பெறலாம்.

இப்பயிற்சியை பெற www.tahdco.com (http://www.tahdco.com) என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். பயிற்சிக்கான கட்டணம் தாட்கோ வழங்கும்.

மேலும் விபரங்களுக்கு மாவட்ட கலெக்டர் அலவலகத்தில் உள்ள தாட்கோ மேலாளர் அலுவலகத்தை அணுகலாம்.

அல்லது 04364-211 217 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News