உள்ளூர் செய்திகள்
கோத்தகிரியில் 2 மணி நேரம் கொட்டி தீர்த்த மழை
- வெயிலின் தாக்கம் சற்று குறைந்து, இதமான குளிர்ந்த காலநிலை நிலவி வருகிறது.
- மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கோத்தகிரி,
கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 1 வார காலமாக வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக காணப்பட்டது. இதனால் வேலைக்கு செல்வோர் மற்றும் பள்ளி குழந்தைகள் என அனைவரும் சிரமப்பட்டு வந்தனர். இந்த நிலையில் கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மதியம் சுமார் 2 மணி நேரம் பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் அந்த பகுதியில் வெயிலின் தாக்கம் சற்று குறைந்து, இதமான குளிர்ந்த காலநிலை நிலவி வருகிறது. இது அங்கு வசிக்கும் பொதுமக்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.