நெல்லை மாவட்டத்தில் 2 கட்டமாக நடக்கிறது- கலைஞர் மகளிர் உரிமை தொகைக்காக 1,434 விண்ணப்ப பதிவு மையங்கள்
- மகளிருக்கு மாதம் ரூ. 1000 உதவித்தொகை செப்டம்பர் மாதம் முதல் தொடங்கப்படும் என தி.மு.க. அரசு அறிவித்தது.
- தமிழக அரசின் சார்பில் ரூ. 7 ஆயிரம் கோடி திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
நெல்லை:
தமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பெரும்பான்மை வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றிய தி.மு.க. அரசு தனது தேர்தல் அறிக்கையில் பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்திருந்தது.
குடும்பத்தலைவிகளுக்கு ரூ. 1000
அதில் பெண்களிடம் பெரும் எதிர்பார்பை பெற்றது குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 1000 உரிமைத்தொகை வழங்கும் திட்டம் ஆகும். இந்நிலையில் மகளிருக்கு மாதம் ரூ. 1000 உதவித்தொகை செப்டம்பர் மாதம் முதல் தொடங்கப்படும் என தி.மு.க. அரசு அறிவித்து அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்றது. இதற்கிடையே இந்த திட்டம் கலைஞர் மகளிர் உதவித்தொகை திட்டம் என்று அழைக்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சில நாட்களுக்கு முன்னர் தெரிவித்தார். மேலும் இந்த திட்டத்திற்காக தமிழக அரசின் சார்பில் ரூ. 7 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே தமிழ்நாடு முழுவதும் இத்திட்டத்திற்கான விண்ணப்படிவங்கள் வழங்கும் பணிக்கான ஏற்பாடுகள் தொடங்க ப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம்
நெல்லை மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த 2 கட்டங்களாக விண்ணப்பதிவு முகாம்கள் செயல்படுத்தப்பட உள்ளது. அதன்படி விண்ணப்பங்கள் அனைத்து கிராம ஊராட்சி களிலும் 528 ரேஷன் கடைகளின் பணியாளர்கள் மூலம் வருகிற 20-ந்தேதி முதல் வீடுகளுக்கு சென்று விண்ணப்பங்கள், டோக்கன்கள் வழங்கப்படு கிறது. பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் 24-ந்தேதி முதல் ஆகஸ்ட்டு 4-ந்தேதி வரை பெறப்படுகிறது. இதற்காக 764 விண்ணப்பபதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாநகராட்சி, களக்காடு, அம்பை, வி.கே.புரம் நகராட்சிகள் மற்றும் அனைத்து பேரூராட்சி களிலும் 312 ரேஷன் கடைகளின் பணியாளர்கள் மூலம் ஆகஸ்ட்டு 1-ந்தேதி முதல் வீடுகளுக்கு சென்று விண்ணப்பங்கள், டோக்கன்கள் வழங்கப்ப டுகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஆகஸ்ட்டு 5-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை 669 இடங்களில் பதிவு செய்யப்படுகிறது. மொத்தம் 669 இடங்களில் பதிவு செய்யப்படுகிறது. மொத்தம் 840 ரேஷன் கடைகளுக்கும் 1,434 பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ள.
கட்டுப்பாட்டு அறைகள்
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டிய சிறப்பு முகாம்கள் நடக்கும் இடம், நாள் மற்றும் நேரம் ஆகியவை பொதுமக்களுக்கு வழங்கப்படும் டோக்க ன்களில் குறிப்பிடப்பட்டி ருக்கும். பொதுமக்கள் இந்த திட்டம் குறித்து விபரங்களை தெரிந்து கொள்ளும் வகையில் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
மாவட்ட அளவிலான கட்டுப்பாட்டு அறை கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும். இதற்கான தொடர்பு எண் 9786566111, மாநகராட்சி மற்றும் வட்டார அளவிலான கட்டுப்பாட்டு அறைகள் வருகிற 20-ந்தேதி முதல் அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும். தாலுகா வாரியாக தொடர்பு எண்கள் வருமாறு:- நெல்லை மாநகராட்சி -0462 2329328, நெல்லை- 0462 2333169, பாளை - 0462 2500086, மனூார் - 0462 2914060, சேரன்மகாதேவி - 04634 260007, அம்பை - 04634 250348, நாங்குநேரி - 04635 250123, ராதாபுரம் - 04637 254122, திசையன்விளை - 04637 271001.