உள்ளூர் செய்திகள்

தஞ்சை மாவட்ட ஊர்க்காவல் படையில் தேர்வான திருநங்கைக்கு பணி நியமன ஆணை.

ஊர்க்காவல் படையில் தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கல்

Published On 2022-12-11 15:09 IST   |   Update On 2022-12-11 15:09:00 IST
  • ஆயுதப்படை மைதானத்தில் அடிப்படை பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
  • ஊர்க்காவல் படையில் திருநங்கை தேர்வு செய்யப்பட்டது இதுவே முதல் முறை.

தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்ட ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள 36 பணியிடங்களுக்கு கடந்த அக்டோபர் மாதம் உடற்தகுதி தேர்வும், சான்றிதழ் சரிபார்ப்பும் நடந்தது.

இதில் தகுதி அடிப்படையில் 34 ஆண்கள், ஒரு பெண், ஒரு மூன்றாம் பாலினத்தவர்(திருநங்கை சிவன்யா) என மொத்தம் 36 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இவர்களுக்கு பணி நியமன ஆணைகளை போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா வழங்கினார். பணி நியமன ஆணை பெற்றவர்களுக்கு
தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் அடிப்படை பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

தஞ்சை மாவட்ட ஊர்க்காவல் படையில் திருநங்கை தேர்வு செய்யப்பட்டது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சியில் ஊர்க்காவல் படை உதவி சரக தளபதி செந்தில்குமார், மண்டல தளபதி சுரேஷ், துணை மண்டல தளபதி மங்களேஸ்வரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

Tags:    

Similar News