உள்ளூர் செய்திகள்

கடைமுழுவதும் தீயில் எரிந்து நாசமானது.

பழனியில் இன்று பழைய இரும்பு கடையில் பயங்கர தீ விபத்து

Published On 2023-04-13 11:54 IST   |   Update On 2023-04-13 11:54:00 IST
  • அதிகாலை 3 மணியளவில் கடை தீப்பிடித்து மளமளவென எரிய தொடங்கியது.
  • கடையில் இருந்த பல்வேறு பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது.

பழனி:

பழனி அருகே திருநகர் பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவர் பழனி மலைக்கோவில் பின்பு உள்ள ஆவின்பால்பண்ணை எதிரே பழைய இரும்பு கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார்.

இன்று அதிகாலை 3 மணியளவில் கடை தீப்பிடித்து மளமளவென எரிய தொடங்கியது. இதனை பார்தத அக்கம்பக்க த்தினர் பழனி தீயணைப்பு த்துறை யினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் தீயை கட்டுப்படுத்த முயன்றனர். இதனால் தீ பக்கத்து கடைகளுக்கு பரவுவது தடுக்கப்பட்டது.

சுமார் ஒரு மணிநேர போராட்டத்திற்கு பின்பு தீயணைப்புத்துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் கடையில் இருந்த பல்வேறு பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது. காற்றின்மூலம் தீ பரவியதா, மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டதா அல்லது மர்மநபர்கள் யாரேனும் கடைக்கு தீ வைத்து சென்றனரா என்பது குறித்து பழனி டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News