உள்ளூர் செய்திகள்

தமிழக மீனவர் வீரவேல்

null

தமிழக மீனவர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது குறித்து விசாரணை- பாதுகாப்புத்துறை விளக்கம்

Published On 2022-10-21 19:22 GMT   |   Update On 2022-10-22 01:29 GMT
  • சந்தேகத்திற்கிடமான படகை நிறுத்துமாறு பல முறை எச்சரிக்கை விடுத்தனர்.
  • எச்சரிக்கை விடுக்கும் முறையில் படகு மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

தமிழக மீனவர் வீரவேல் மீது இந்திய கடற்படை துப்பாக்கி சூடு நடத்தியது தொடர்பாக பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்தியா-இலங்கை சர்வதேச கடல் எல்லைக்கு அருகில் உள்ள பால்க் விரிகுடா பகுதியில் இந்திய கடற்படை கப்பல் தொடர்ந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தது. 21ந் தேதி அதிகாலையில், சந்தேகத்திற்கிடமான படகு ஒன்றை கண்ட இந்திய கடற்படையினர் அந்த படகை நிறுத்துமாறு பல முறை எச்சரிக்கை விடுத்தனர்.

ஆனால் படகு நிற்காததால், அதை நிறுத்தும் வகையில் எச்சரிக்கை முறையில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் சந்தேகத்திற்கிடமான வகையில் அந்த படகில் இருந்தவர்களில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. காயமடைந்த நபர், முதலுதவி சிகிச்சைக்கு பின், இந்திய கடற்படை ஹெலிகாப்டர் மூலம் ராமநாதபுரத்தில் உள்ள ஐஎன்எஸ் கடற்படை தளத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டார்.

பின்னர் தமிழக அரசு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். தொடர்ந்து ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News