உள்ளூர் செய்திகள்

அஞ்சல் துறை சார்பில் விபத்து காப்பீட்டு திட்டம் அறிமுகம்

Published On 2022-10-28 06:28 GMT   |   Update On 2022-10-28 06:28 GMT
  • பஜாஜ் அலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு ரூ.396-ல், ரூ10 லட்சம் மதிப்புள்ள விபத்து காப்பீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.
  • 18 வயது முதல் 65 வயது வரை உள்ளவர்கள் இந்த காப்பீட்டு திட்டத்தில் சேரலாம்.

பரமத்தி வேலூர்:

நாமக்கல் மாவட்ட அஞ்சல் கோட்ட கண்கா ணிப்பாளர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியின் டாடா ஏ.ஐ.ஜி ஜெனரல் இன்சூரன்ஸ் மற்றும் பஜாஜ் அலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு ரூ.396-ல், ரூ10 லட்சம் மதிப்புள்ள விபத்து காப்பீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.

18 வயது முதல் 65 வயது வரை உள்ளவர்கள் இந்த காப்பீட்டு திட்டத்தில் சேரலாம்.விண்ணப்ப படிவம், அடையாள, முகவரி சான்றின் நகல்கள் போன்ற எந்த விதமான காகித பயன்பாடுமின்றி, தபால்காரர் கொண்டு வரும் ஸ்மார்ட் போன், விரல் ரேகை மூலம், வெறும் 5 நிமிடங்களில் முற்றிலும் டிஜிட்டல் முறையில் இந்த பாலிசி வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தின் சிறப்பம்சங்களாக ரூ.10லட்சம் மதிப்புள்ள விபத்து காப்பீடு மற்றும் விபத்தினால் ஏற்படும் மருத்துவ செலவுகளில் உள்நோயாளி செலவு களுக்கு அதிகபட்சம் ரூ.60 ஆயிரம் வரையும், புறநோயாளி செலவுகளுக்கு அதிகபட்சம் ரூ.30ஆயிரம் வரையும், விபத்தினால் மரணம், ஊனம், பக்கவா தம் ஏற்பட்டவரின் குழந்தைகளின் கல்வி செலவுகளுக்கு ரூ.1 லட்சம் வரையும், விபத்தினால் மருத்துவமனையில் அனும திக்கப்படும் நாட்களுக்கு, தினப்படி தொகை ஒரு நாளைக்கு ரூ.1000 வீதம் 10 நாட்களுக்கும், விபத்தில் பாதிக்கப்பட்டவரை பார்க்க பயணிக்கும் குடும்பத்தினரின் பயண செலவுகளுக்கு அதிகபட்சம் ரூ.25,000 வரையும், விபத்தினால் உயிரிழக்க நேரிட்டால், ஈமக்கிரியைகள் செய்ய ரூ.5,000 வரையும் காப்பீடு வழங்கப்படுகிறது.

பொது மக்கள் அனை வரும் பரமத்தி வேலூர், பொத்தனூர், பரமத்தி, ஜேடர்பாளையம், பாண்ட மங்கலம் உள்ளிட்ட பல்வேறு அஞ்சலகங்கள், தபால்காரர்கள் மூலம் இந்த குழு விபத்து காப்பீட்டு திட்டத்தில் இணைந்து பயன்பெறுலாம்.

இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார். 

Tags:    

Similar News