உள்ளூர் செய்திகள்

போட்டியில் முதல் பரிசு பெற்ற தேன்கனிக்கோட்டை நொகனூர் அணிக்கு ரூ.50,001 மற்றும் கோப்பையை ஊராட்சி மன்றத் தலைவர் ஈஸ்வரிமுத்தன் வழங்கினார்.

உள்ளு குறுக்கையில் 20-ம் ஆண்டு கிரிக்கெட் விளையாட்டு போட்டி

Published On 2022-09-01 15:17 IST   |   Update On 2022-09-01 15:17:00 IST
  • இந்த போட்டியில் சேலம், பெங்களுரு மற்றும் சுற்று பகுதியை சேர்ந்த 50 அணிகள் கலந்துக்கொண்டனர்.
  • மூன்றாம் பரிசு ரூ.30,000 எக்காண்டஅள்ளி அணிக்கும், நான்காம் பரிசு ரூ.20,001-கெலமங்கலம்அணிக்கும் வழங்கப்பட்டது.

ராயக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் ஒன்றியம் திம்ஜேப்பள்ளி ஊராட்சி உள்ளு குறுக்கையில் 20-வது ஆண்டு கிரிக்கெட் விளையாட்டு போட்டி அரசு மருத்துவமனை அருகில் நடைபெற்றது.

இந்த போட்டியில் சேலம், பெங்களுரு மற்றும் சுற்று பகுதியை சேர்ந்த 50 அணிகள் கலந்துக்கொண்டனர்.

முதல் நாள் போட்டியை ஊராட்சி மன்றத் தலைவர் ஈஸ்வரிமுத்தன் தொடங்கி வைத்தார்.

மூன்று நாட்கள் நடைப்பெற்ற போட்டியில் முதல் பரிசாக தேன்கனிக்கோட்டை நொகனூர் அணிக்கு ரூ50,001-மற்றும் கோப்பையை ஊராட்சி மன்றத் தலைவர் ஈஸ்வரிமுத்தன் வழங்கினார்.

இரண்டாம் பரிசு ரூ.40,001, உள்ளு குறுக்கை அணிக்கு தொழில் அதிபர் கிருஷ்ணமூர்ததி வழங்கினார். மூன்றாம் பரிசு ரூ.30,000 எக்காண்டஅள்ளி அணிக்கும், நான்காம் பரிசு ரூ.20,001-கெலமங்கலம்அணிக்கும், ஐந்தாம் பரிசு ரூ.15,001-ராயக்கோட்டை அணிக்கும் ஆறாம் பரிசு ரூ.10,001 - செட்டிப்பள்ளி அணிக்கும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி ஏற்பாடுகளை உள்ளு குறுக்கை கிரிக்கெட் டீம் குழுவினர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News