உள்ளூர் செய்திகள்

மகளிர் தினம்- தமிழக தலைவர்கள் வாழ்த்து

Published On 2023-03-07 15:47 IST   |   Update On 2023-03-07 15:47:00 IST
  • நாளை சர்வதேச மகளிர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
  • பெண்களுக்கு தமிழகத்தின் பல்வேறு கட்சி தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

சென்னை:

நாளை (புதன்கிழமை) சர்வதேச மகளிர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி பெண்களுக்கு தமிழகத்தின் பல்வேறு கட்சி தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் ஆகியோர் மகளிர் தின வாழ்த்து செய்தி வெளியிட்டனர்.

Tags:    

Similar News