உள்ளூர் செய்திகள்

அரூர் அரசு கல்லூரியில் சர்வதேச மகளிர் தின கொண்டாட்டம்

Published On 2023-03-09 15:22 IST   |   Update On 2023-03-09 15:22:00 IST
  • ஒவ்வொரு மாணவிகளும் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
  • பெண்கள் ஒவ்வொருவரும் யாரையும் நம்பி நிற்காமல் சுயமரியாதை உடன் வாழ வேண்டும்.

அரூர்,

தருமபுரி மாவட்டம் அரூர் அரசு கலை கல்லூரியில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.

இந்நிகழச்சியில் மாணவிகளுக்கு பல்வேறு வகையான போட்டிகள் நடத்தப்பட்டதில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் புத்தகங்கள் வழங்கப்பட்டன.

இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பேரூராட்சி செயல் அலுவலர் கலைராணி மாணவி மாணவிகளிடம் பேசும் பொழுது, ஒவ்வொரு மாணவிகளும் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும், படிப்பை யாராலும் திருட முடியாது, பெண்கள் ஒவ்வொருவரும் யாரையும் நம்பி நிற்காமல் சுயமரியாதை உடன் வாழ வேண்டும், அப்போதுதான் ஒவ்வொரு பெண்களும் சுயமரியாதையுடன் இருக்க முடியும் என தெரிவித்தார்.

கல்லூரியின் முதல்வர் வெங்கடேஷன் தலைமை தாங்கினார். மேலும் பேரூராட்சி செயல் அலுவலர் கலைராணி மற்றும் பெண் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். இதில் நாட்டு நலத்திட்ட பணி அலுவலர் முனைவர் கோபிநாத் உள்ளிட்ட ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News