உள்ளூர் செய்திகள்

ஊத்தங்கரை அதியமான் மகளிர் கல்லூரியில் சர்வதேச யோகா தினம்

Published On 2023-06-22 09:52 GMT   |   Update On 2023-06-22 09:52 GMT
  • கல்லூரி முதல்வர் திருமால்முருகன் சிறப்புரையாற்றினார்.
  • பேராசிரியர் சுமதி சிறப்பு யோகாசனங்கள் மற்றும் பயிற்சிகளை வழங்கினார்.

மத்தூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அதியமான் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகாத்துறை, நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் செஞ்சிலுவைச் சங்கம் சார்பாக யோகா தினம் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இவ்விழா தமிழ்த்தாய் வாழ்த்துடன் இனிதே தொடங்கியது.

இவ்விழாவில் கல்லூரி முதல்வர் திருமால்முருகன் சிறப்புரையாற்றினார்.செயலர் ஷோபா தலைமையுரை ஆற்றினார்.

மேலும் தமது தலைமையுரையில், மாணவர்கள் தினமும் யோகா செய்வதன் மூலம் மனவலிமை மற்றும் உடல்நலம் பெற முடியும் என்பதை அறிவுறுத்தினார்.

இந்நிகழ்வில் மாணவர் களும் பேராசிரியர்களும் பங்கேற்றனர்.

யோகாத்துறை பேராசிரியர் சுமதி பெண்களுன சிறப்பு யோகாசனங்கள் மற்றும் பயிற்சிகளை வழங்கினார்.

ஆயுட்காலத்தை நீடிக்கும் உணவுமுறைகள் மற்றும் முத்திரை பயிற்சிகள் வழங்கப்பட்டன.

தாவரவியல் துறை தலைவர் மஞ்சுளா நன்றியுரையாற்றினார். இந்நிகழ்ச்சி அனைவருக்கும் மிகவும் பயனுள்ள வகையாக அமைந்தது. இவ்விழாவானது இனிதே நாட்டுப் பண்ணுடன் நிறைவுற்றது.

Tags:    

Similar News