உள்ளூர் செய்திகள்

பேரணியை பாபநாசம் தாசில்தார் பூங்கொடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

சர்வதேச பேரிடர் குறைப்பு மற்றும் விழிப்புணர்வு தின பேரணி

Published On 2022-10-15 10:20 GMT   |   Update On 2022-10-15 10:20 GMT
  • பேரணி முக்கிய வீதிகள் வழியாக கபிஸ்தலம் பாலக்கரையில் வந்து நிறைவடைந்தது.
  • பேரணிக்கு வருவாய் ஆய்வாளர் சுகுணா தலைமை வகித்தார்.

கபிஸ்தலம்:

தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிவுறுத்தல்படி கபிஸ்தலம் அருகே கோவிந்தநாட்டுச்சேரியிலும் மற்றும் கபிஸ்தலம் பாலக்கரையிலும் சர்வதேச பேரிடர் குறைப்பு மற்றும் விழிப்புணர்வு தின சிறப்பு பேரணி நடைபெற்றது.

கபிஸ்தலம் பாலக்கரையில் நடைபெற்ற பேரணிக்கு வருவாய் ஆய்வாளர் சுகுணா தலைமை வகித்தார்.

பேரணியை பாபநாசம் தாசில்தார் பூங்கொடி கொடி அசைத்து தொடக்கி வைத்தார். பேரணி முக்கிய வீதிகள் வழியாக கபிஸ்தலம் பாலக்கரையில் வந்து நிறைவடைந்தது.

இதில் மண்டல துணை வட்டாட்சியர் பிரியா, வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார், ஊராட்சி மன்ற தலைவர்கள் ஜெகநாதன், ஜெய்சங்கர், காமராஜ், யசோதா சரவணன் உள்பட உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

பேரணியில் தன்னார்வ தொண்டு நிறுவன முதல்நிலை பொறுப்பாளர்கள், வருவாய்துறை பணியாளர்கள், பொது மக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News