உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

மாணவர் சேர்க்கையில் இடஒதுக்கீட்டு முறையை பின்பற்ற உத்தரவு

Published On 2022-06-21 10:37 GMT   |   Update On 2022-06-21 10:37 GMT
  • மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீட்டை பின்பற்ற வேண்டும்.
  • அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் :

தமிழகத்தில் பிளஸ்- 2, 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. 10-ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாகிய நிலையில் மேல்நிலைப்பள்ளி மாணவர் சேர்க்கை தொடங்கி உள்ளது. கல்வித்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை அரசாணைப்படி, மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீட்டை பின்பற்ற வேண்டுமென தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

இட ஒதுக்கீடு அரசாணைப்படி பொதுப்பிரிவு -31, பிற்படுத்தப்பட்டோர் -26.5, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் -20, ஆதிதிராவிடர் -1 8 சதவீதம், பழங்குடியினர் - 1, பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர் -3.5 சதவீதம் என ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து வகை பள்ளிகளிலும், பாடப்பிரிவு வாரியாக இடஒதுக்கீட்டை முழுமையாக கடைபிடிக்க வேண்டும்*.ட ஒதுக்கீட்டின்படி, மாணவர் சேர்க்கை நடந்தது குறித்தும், அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து திருப்பூர் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் நீங்கலாக, அனைத்து பள்ளி நிர்வாகமும், பாடப்பிரிவு வாரியாக இட ஒதுக்கீடு வழங்கி மாணவர் சேர்க்கை நடக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது என்றனர்.

Tags:    

Similar News