உள்ளூர் செய்திகள்

சத்யா நகரில் உள்ள பிரியாணி கடையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

தரமற்ற உணவுகள் விற்கப்படுவதாக புகார் திண்டுக்கல் ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு

Published On 2022-10-20 07:08 GMT   |   Update On 2022-10-20 07:08 GMT
  • சத்யா நகரில் உள்ள தனியார் பிரியாணி ஓட்டலில் கெட்டுப்போன சிக்கனை வாடிக்கையாளர்களுக்கு பரிமாறியதாக எழுந்தது
  • இதில் ஓட்டலில் சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிப்பது தெரியவந்தது. இதனைதொடர்ந்து கடை உரிமையாளருக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது.

குள்ளனம்பட்டி:

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து பொதுமக்கள் திண்டுக்கல் நகருக்கு இனிப்பு, புத்தாடை, பட்டாசு வாங்க வருகின்றனர். மேலும் ஓட்டல்களிலும் சாப்பிட ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனை பயன்படுத்தி பல்வேறு ஓட்டல்களில் விதவிதமாக அசைவ உணவுகள் தயார்படுத்தி வருகின்றனர்.

இதில் சிலர் தரமற்ற இறைச்சிகளை பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக சென்னை மற்றும் திண்டுக்கல் உணவு பாதுகாப்பு அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. அஞ்சலி ரவுண்டானா அருகே சத்யா நகரில் உள்ள தனியார் பிரியாணி ஓட்டலில் கெட்டுப்போன சிக்கனை வாடிக்கையாளர்களுக்கு பரிமாறியதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் சிவராமபாண்டியன் அறிவுறுத்தலின்படி உணவு பாதுகாப்பு அலுவலர் சந்திரமோகன் ஆய்வு மேற்கொண்டார்.

கடையின் உணவு சமைக்கும் இடத்தில் பின்பற்றப்படும் சுகாதார நடைமுறைகள், இறைச்சிகளை வைத்திருக்கும் முறை, ரசாயன வண்ணங்கள் ஏதும் சேர்க்கப்படுகிறதா, காலாவதியான உணவு பொருட்கள் உள்ளதா என தொடர்ந்து சோதனை நடத்தினர்.

இதில் ஓட்டலில் சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிப்பது தெரியவந்தது. இதனைதொடர்ந்து கடை உரிமையாளருக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது.

மேலும் நகரின் பல்வேறு ஓட்டல்களிலும் அதிகாரிகள் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். வாடிக்கையாளர்களுக்கு தரமான உணவுகளை மட்டும் கொடுக்க வேண்டும். தரமற்ற பொருட்கள் உணவு தயாரிக்க பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர்.

நகரில் உள்ள பெரும்பாலான கடைகளில் உணவு விலை பட்டியல் வைப்பது இல்லை என பொதுமக்கள் அதிகாரிகளிடம் முறையிட்டனர். அதற்கு தனிப்பிரிவு உள்ளது. அந்த அலுவலர்கள் மூலம் இதற்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

Tags:    

Similar News