உள்ளூர் செய்திகள்

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் இல.நிர்மல்ராஜ் ஆய்வு செய்தார்.

பாண்டவயாறு கதவணையில் மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் ஆய்வு

Published On 2022-12-10 07:14 GMT   |   Update On 2022-12-10 07:14 GMT
  • வெட்டாற்று கதவணையில் நீரோட்டத்தை பார்வையிட்டு கரைகளை ஆய்வு செய்தார்.
  • மழைநீர் தடையின்றி செல்கிறதா என்பதையும் ஆய்வு செய்தார்.

திருவாரூர்:

திருவாரூர் வட்டத்திற்கு ட்பட்ட கங்களாஞ்சேரி, ஓடாச்சேரி, மாங்குடி ஆகிய பகுதிகளில் மாண்டஸ் புயல் மற்றும் கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் முன்னிலையில் மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை ஆணையர் இல.நிர்மல்ராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கங்களாஞ்சேரி கிராமத்தில் வெட்டாற்று கதவணையில் நீரோட்டத்தினை பார்வையிட்டு கரைகளை ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, ஓடாச்சேரி கிராமத்தில் வெட்டாறு நீரொழுங்கி, மாங்குடி கிராமத்தில் பாண்டவயாறு கதவணை ஆகிய பகுதிகளில் மழைநீர் தடையின்றி செல்கிறதா என்பதனை ஆய்வு செய்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

இந்த ஆய்வில் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் சந்திரா, திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா, வெண்ணாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் ராஜேந்திரன், உதவி செயற்பொறியாளர் சிதம்பரநாதன், உதவி பொறியாளர் தங்கமுத்து மற்றும் பலர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News