உள்ளூர் செய்திகள்

கல்வராயன் மலையில் உள்ள சோதனை சாவடிகளை வடக்கு மண்டல மதுவிலக்கு போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் ஆய்வு செய்தார்

கல்வராயன் மலையில் உள்ள சோதனை சாவடிகளை ஆய்வு செய்த வடக்கு மண்டல மதுவிலக்கு போலீஸ் சூப்பிரண்டு

Published On 2023-05-28 07:30 GMT   |   Update On 2023-05-28 07:30 GMT
  • கள்ளச்சாராயம் காய்ச்சி பல்வேறு மாவட்டங்களுக்கு கடத்திச் சென்று விற்பனை செய்து வருகின்றனர்.
  • போலீசார் முகாமிட்டு கள்ளச்சாராய ஊறல்களை கண்டுபிடித்து அழித்து வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை பகுதியில் 171 மலை கிராமங்களும் 75 ஆயிரத்திற்கு மேற்பட்ட மலைவாழ் மக்களும் வசித்து வருகிறார்கள். இப்பகுதி சேலம் தர்மபுரி திருவண்ணா மலை கள்ளக்குறிச்சி ஆகிய 4 மாவட்டங்களை இணை க்கும் ஒரு அடர்ந்த வனப்பகு தியாக உள்ளது. மலையில் உள்ள நீர்ஓடைகளில் வரும் தண்ணீரை பயன்படுத்தி சில சமூக விரோதிகள் கள்ளச்சாராயம் காய்ச்சி பல்வேறு மாவட்ட ங்களுக்கு கடத்திச் சென்று விற்பனை செய்து வருகின்றனர். இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்து பல பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தை பெரும் பரபரப்பாக்கியது.

இந்த நிலையில் கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த தமிழக அரசு பல முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது அதன் எதிரொ லியாக கல்வராய ன்மலையில் சென்னை வடக்கு மண்டல போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் தலைமையிலான மதுவிலக்கு போலீசார் முகாமிட்டு கள்ளச்சாராய ஊறல்களை கண்டுபிடித்து அழித்து வருகின்றனர். இந்த நிலையில் கல்வராயன் மலையில் இருந்து கள்ளச்சாராயம் காய்ச்சி மலை அடிவாரம் பகுதி வழியாக கள்ளச்ச ராயம் கடத்தி வருவது தடுக்கும் விதமாக கல்வராயன்மலையில் உள்ள 4 புறங்களிலும் குறிப்பாக மூலக்காடு லக்கிநாயக்கன்பட்டி மாயம்பாடி துருர் ஆகிய பகுதிகளில் சோதனை சாவடிகள் அமைத்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில் சோதனை சாவடிகளை சென்னை வடக்கு மண்டல போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் ஆய்வு செய்து கள்ளச்சா ராயத்தை கடத்தி வருவதை தடுக்கும் விதமாக நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

Tags:    

Similar News