உள்ளூர் செய்திகள்
ஓட்டுக்கட்டிடத்தில் இயங்கி வரும் கிராம நிர்வாக அலுவலகம்.
புதிய கிராம நிர்வாக அலுவலக கட்டிடம் கட்ட வலியுறுத்தல்
- கிராம நிர்வாக அலுவலகம் தற்போது வரை ஓட்டு கட்டிடத்தில் தான் இயங்கி வருகிறது.
- மழை காலங்களில் ஒழுகுவதால் அலுவலகத்தில் உள்ள கோப்புகள் நனைந்து சேதமாகிவிடுகிறது.
திருத்துறைப்பூண்டி:
காங்கிரஸ் கட்சியின் மாநில செயலாளர் நாச்சிகுளம் ஜெ. தாஹிர் தமிழக அரசு வருவாய்துறை அமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி தாலுகா, உதயமார்த்தாண்டபுரம் ஊராட்சியில் கிராம நிர்வாக அலுவலகம் உள்ளது. இந்த கிராம நிர்வாக அலுவலகம் தற்போது வரை ஓட்டு கட்டிடத்தில் தான் இயங்கி வருகிறது.
இந்த கட்டிடம் மழை காலங்களில் ஒழுகுவதால் அலுவலகத்தில் உள்ள கோப்புகள் நனைந்து சேதமாகிவிடுகிறது.
எனவே, ஓட்டு கட்டிடத்திற்கு பதிலாக புதிய கான்கிரீட் கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.