உள்ளூர் செய்திகள்
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 5 ஆயிரம் கன அடியாக நீடிப்பு
- இரு தினங்களுக்கு முன்பு ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 6 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது.
- ஐந்தருவி, சீனி அருவி மெயின் அருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
ஒகேனக்கல்,
கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்களுக்கு நீர் வரத்து கடந்த ஒரு வாரமாக நீர்வரத்து குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 6 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது.
அதனைத் தொடர்ந்து நேற்று நீர்வரத்து 5 ஆயிரம் கன அடியாக குறைந்து வந்தது. இன்று 2-வது நாளாக தொடர்ந்து நீர்வரத்து அதே அளவு வந்து கொண்டிருக்கிறது.
இந்த நீர்வரத்து காரணமாக ஐந்தருவி, சீனி அருவி மெயின் அருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.